நண்பர் ஒருவர் buy.com -ல் லேப்டாப் 41 டாலருக்கு டீல் போட்டிருப்பதாக சொல்ல நானும் ஏதோ Netbook -காக இருக்கும் என்று பார்த்தால் Listed price $1299 போட்டிருந்தது ,அதுவும் Highend configuration(Intel duo 2.26GHz,Vista Business ,Blutooth,gigabyte Ethernet,4gb RAM,250gb Hd).ஏதோ தப்பாக போட்டிருப்பார்கள் என்று நினத்தாலும், வந்தால் வரட்டும் shipping சேர்த்து 48 டாலர்தானே என்று ஒன்னு ஆர்டர் செஞ்சிட்டேன்.நான் பெற்ற இன்பமோ துன்பமோ நண்பர்களும் அனுபவிக்கட்டுமே என்று எல்லாருக்கும் Phone பண்ணி சொல்லியாச்சு.அண்ணனுக்கு ஒன்று ,தம்பிக்கு ஒன்று எல்லாரும் ஆர்டர் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க.கூட இருதவர்கலெல்லாம் எனக்கு ரெண்டு ,எனக்கு மூணு என்று சொல்ல நண்பர் ஒருவர் மொத்தமா 8 ஆர்டர் பண்ணிட்டாரு.இன்னொரு நண்பர் தப்புன்னு அவங்க கண்டுபிடிக்கறதுக்கு முன்னால் நம்ம வாங்கிடலாம் என்று கூட பத்து டாலர் போட்டு express delivary ஆர்டர் பண்ணிட்டாரு.
எல்லோருடைய சந்தோஷமும் அடுத்த நாள் வரத்தான் நீடிச்சது.அடுத்த நாள் ஆர்டர் confirmation-ல் Wii கேம் (அதுவும் மட்டமான கேம் 21 டாலர்தான் ) என்று வரவும் மக்கள் ஆளாளுக்கு அந்த கம்பெனிக்கு phone செய்து ஆர்டரை நிறுத்தி விடலாம் என்று முயற்சித்தால்,phone ரிங்கிக்கிட்டேதான் இருக்கு எவனும் எடுத்த மாதிரி தெரியல.சரின்னு ஒரு mail-ஐ தட்டிவிட்டுட்டு ,41 எள்ளுதான் என்ற முடிவுக்கு வந்தாச்சு.
அடுத்த நாள்,அங்கேயிருது ஒரு mail வந்தது
"சாரிப்பா தப்பாகி போச்சு ,கஷ்டப்படுத்துனதுக்கு மன்னிச்சுக்கோ ,ஆர்டரை cancel பண்ணியாச்சு காசையும் திருப்பி கொடுததிடுறோம் , 10 டாலர் இனமா(gift voucher) வேணா வச்சுக்க"
எப்படியோ Buy.com இந்த லேப்டோப் மேட்டருக்கு ஒரு முற்று புள்ளி வச்சிடுச்சு. இதனால் சொல்லப்படுவது என்னவென்றால் "அத்தனைக்கும் ஆசைப்படு".
Nov
16
November 16, 2009 at 12:45 PM
"இதனால் சொல்லப்படுவது என்னவென்றால் "அத்தனைக்கும் ஆசைப்படு"
yeah it is Good policy
:-))))))))))
November 16, 2009 at 12:49 PM
@Puthuvai Siva.. Thanks for your first visit.
November 16, 2009 at 1:19 PM
ஆஹா.. பத்து இனாமா?! :)
தேங்க்ஸ் கிவிங்க்கு பயன்படும்! :)
November 16, 2009 at 1:29 PM
41 $க்கு லாப்டாப்பான்னு ஆச ஆசயா உள்ள வந்த என்னை இப்படி ஏமாத்திட்டீங்களே
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
November 16, 2009 at 1:45 PM
சேம் ப்ளட்....... எனக்கும் நண்பர் ஒருவர் அர்த்தராத்திரியில் போன் பண்ணிச் சொன்னார். சரி மக்களுக்கு ஆளுக்கு ஒண்ணு அன்பளிப்பா கொடுப்பமேன்னு 3 ஆர்டர் பண்ணிட்டு, அடுத்த நாள் பார்த்தால்...ம்ஹூம்