அன்று மதியம் 3 மணியளவில் DownTown ஸ்டேஷனில் ட்ரைன் பிடிக்கும்போது இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ஏறுன கம்பார்ட்மென்டில் என்னையும் சேர்த்து பத்து பேர் தான் இருந்தோம், அதில ஆறு பேர் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மாதிரி தெரிந்தது, MIT, Harvard,UMass எல்லாம் இந்த ரூட்ல இருப்பதால நிறைய காலேஜ் பசங்கள பார்க்கமுடியும், ரொம்ப சீரியசா அரட்ட அடிச்சிகிட்டு இருந்தாங்க. வாசலோரமா எனக்கு அருகில் ஒரு வயதான ஜோடி அவங்களுக்கு எதிர் வரிசையில் அவன். வண்டி ஸ்டேஷனில் இருந்து கிளம்பின பிறகுதான் நான் அவனை பார்த்தேன். இதற்கு முன்னால் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. எனக்கு 'திக்'கென்றது. சந்தேகமே இல்லை. அவன் என்னால் ஜெயிலுக்கு அனுப்பப் பட்டவனே தான்.

அது நடந்து ரெண்டு வருடமிருக்கும், ஒரு நாள் எனது வண்டியை ரோட்டோரமாக பார்க் செய்துவிட்டு மட்டன் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக இருந்த மிடில் ஈஸ்ட்காரன் கடைக்கு சென்றிருந்தேன். திரும்பி வரும்போது ஏதோ கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. ஒருவேளை என்னுடைய கார் தானோ என்ற தவிப்பில் காரை நோக்கி ஓடினேன். ஆம். உடைந்தது என்னுடைய கார் கண்ணாடி தான். அப்போது தான் முதன் முதலாய் அவனைப் பார்த்தேன். நான் வருவது தெரிந்ததும், அங்கிருந்து ஓடிவிட்டான். என் நல்ல காலம். அவன் என் காரிலிருந்து எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. முறைப்படி போலீசுக்கும், என்னோட இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் போன் பண்ணிட்டு என் வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்த நாள் போலீஸ் ஆளை பிடிச்சிட்டதாகவும் வந்து அடையாளம் காட்ட முடியுமான்னும் வாய்ஸ் மெயில் விட்டிருந்தார்கள். சரின்னு நானும் போயிருந்தேன். அங்கதான் அவனை முழுசாக பார்த்தேன், வெள்ளக்காரந்தான், ஹோம்லேஸ் மாதிரி தெரிந்தது, சவுத் accent-ல பேசினான், அவனும் என்னை நன்றாக பார்த்தான், அடுத்த முறை பார்த்தால் உன்னை கொன்று விடுவேன் என்று சொல்வது போலிருந்தது அவன் பார்வை. அதுக்கப்புறம் அவனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை கிடச்சதாக என்னை அழைத்த போலீஸ் சொல்லி தெரிந்துகொண்டேன்.

அவனை இப்படி எதிரும் புதிருமா, கூட்டமில்லாத ட்ரைனில் வைச்சு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதற்குள் அந்த முதியவர்கள் Broadway-ல் இறங்கி விட, அந்த காலேஜ் கும்பலும் UMass-ல் இறங்கி விட, புதிதாக ஒருவன் வண்டியில் ஏறினான். பார்ப்பதற்கு ராணுவத்தில் வேலை பார்ப்பவன் போலிருந்தான். கொஞ்சம் தைரியம் வந்தது, எனது iphone-ல் Sudoku போட ஆரம்பித்தேன். வண்டி அடுத்த ஸ்டேஷனை கடந்துவிட்டதையும் அந்த மிலிடிரிகாரன் இறங்கி இருந்ததையும் சுத்தமாக அறியாமல் இருந்தேன்.
யாரோ என்னைக் கூர்ந்து கவனிப்பது போல இருக்கவே நிமிர்ந்து பார்த்தேன், அவன்தான், என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது நானும் அவனும் மட்டுமே அந்த கம்பார்ட்மென்டில் இருந்தோம். அடுத்த ஸ்டேஷன் வர எப்படியும் ஐந்து நிமிடங்களாவது ஆகும். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் எதாவது செய்ய முயற்சி செய்தாலோ, இல்லை இல்லை, அவன் கிட்ட இருந்து ஒரு அசைவு தெரிந்தாலே, உடனடியா Emergency Lever -ஐ இழுத்து விடலாம். என்னவானாலும் சரி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடலாம் என முடிவு செய்து கொஞ்சம் தைரியமாகவே உட்கார்ந்து இருந்தேன்.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமா கடக்கிறது காதலில் மட்டுமில்லை பயத்திலும்தான் என்கிற உண்மை எனக்கு அப்பத்தான் புரிஞ்சது. அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டதாக அறிவிப்பு வரவும் நான் அவசரமாக எழுந்திருக்கவும் அவனும் எழுந்திருந்தான். நான் வாசலை நோக்கி ஓட அவன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்திருந்தான். ட்ரைன் நின்ற அதிர்வில் நான் நிலை தடுமாறி கிழே விழ அவன் நெருங்கி வந்து துப்பாக்கியை என் நெற்றியில் வைத்து விசையை அழுத்த....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ........ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அழைக்க "என்னடா ஒரு கதை நச்சுன்னு எழுதி நல்ல பேர் வாங்கலாமுன்னா தனியா ஒரு அரை மணி நேரம் கிடைக்க மாட்டேங்குதே" புலம்பிக்கொண்டே Ctrl-யும் s-யும் ஒரே  நேரத்தில அழுத்திட்டு   வாசலை நோக்கி சென்றான் கதாசிரியன் கண்ணன்.

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

10 Responses to "ரெட் லைன் ( சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009)"

  1. gravatar பிரபாகர் Says:

    நல்லாருக்கு நண்பா...

    Followers Add பண்ணுகங்க... நச்சுனு இருக்கு.

    ஆனா நிறைய பேர் இதே உத்திய பின் பற்றராங்க...

    நல்ல முயற்சி, வாழ்த்துக்கள்.

    பிரபாகர்.

  2. gravatar வண்டிக்காரன் Says:

    நன்றி பிரபாகர் ..

  3. gravatar Prabhu Says:

    அட!

  4. gravatar ராம்குமார் - அமுதன் Says:

    நச்னு இருக்கு....

  5. gravatar சுவாசிகா Says:

    ஆஹா..கிட்டத்தட்ட நான் யோசித்து வைத்த knot..

    இப்ப நீங்க எடுத்துடீங்க..நான் இப்ப வேற தேடனும் :(

    நல்லாவே இருந்தது..நல்லாவே இருங்க ;)

    அன்புடன்,
    சுவாசிகா
    http://ksaw.me

  6. gravatar சந்தனமுல்லை Says:

    ஹப்பாடா..பிழைக்க வைச்சீட்டீங்க அந்த மாணவனை!! :))

    நல்லா இருந்தது..வாழ்த்துகள்!

  7. gravatar SUREஷ்(பழனியிலிருந்து) Says:

    விதி வலியது.., நடப்பதை தடுக்க முடியாது. கதை அத்தோடு முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். ஆனால் கண்ணன் கதி.., கதை..,?

    நச்ச்.., நச்ச்ச்..

  8. gravatar வண்டிக்காரன் Says:

    நன்றி Pappu
    நன்றி ராம்குமார்
    நன்றி சுவாசிகா
    நன்றி சந்தனமுல்லை
    நன்றி Sureஷ்

  9. gravatar Prasanna Says:

    //ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமா கடக்கிறது காதலில் மட்டுமில்லை பயத்திலும்தான் என்கிற உண்மை//

    //Ctrl-யும் s-யும் ஒரே நேரத்தில அழுத்திட்டு//

    சூப்பர் :)) வாழ்த்துக்கள்..

  10. gravatar பாலா Says:

    ஜூப்பருங்க... வண்டி! :) நல்ல ஸ்பீடு!