முன்விமர்சனம் எனப்படுவது யாதெனில் டிரைலர் ,ஸ்டில்ஸ் மற்றும் கிசுகிசுக்களை வைத்து எழுதப்படுவது( ஹாலிவுட் பாலா ,கேபிள் சங்கர் மன்னிப்பார்களாக )
       Sony Pictures மிக பிரமாண்டமான பொருட்செலவில் எடுத்திருக்கும்  படம். Independence Day,Godzilla போன்ற வெற்றி படங்களை எடுத்த Roland Emmerich தான் இயக்கியிருக்கிறார்.நேத்துவரை இவரைப் பத்தி எதுவும் தெரியாதுங்க கூகிள்   செய்த போதுதான் தெரியுது, எனக்கு ரொம்ப பிடிச்ச மெல் கிப்சொனோட 'The Patriot ' படத்தை எடுத்ததும் இவர்தான், போனவருஷம் நான் பார்த்து ரொம்ப நொந்த படமான 10,000 BC எடுத்ததும் இவர்தானாம். (நமக்கு ஹாலிவுட்ல தெரிஞ்ச Directors யாருன்னா,சுறா , டையனோசர் படம் எடுக்கிறவரு,கப்பலை கவுத்தவரு அப்புறம் தப்பு தப்பா எடிட்டிங் பண்ணி ரெண்டு மணி நேரத்துக்கு மேல ரத்த கலரில் படம் எடுக்கிறவரு அவ்வளோதான்).
     Mayan Calender -ல 21,December 2012-க்கு முடிஞ்சு போவதால் ,உலகம் அதற்கு பிறகு இருக்காது என்ற நம்பிக்கையில் எடுக்கப்பட்ட படம்.நிறைய ஹாலிவுட் படங்களில் வருவது மாதிரி இந்த படத்திலும் ஹீரோ John Cusack ஒரு விவாகரத்து ஆனவர்,குழந்தைகள் அவரது மனைவியுடனும் அவளது காதலனுடனும் வசிக்கிறார்கள்.(John Cusack பற்றி தெரியாதவர்களுக்கு ,Money for Nothing எனக்கு பிடிச்சது கொஞ்சம் பழசு,Pushing Tin படத்தில் இவரும் Billy Bob(Angelina jolie யோட Ex )சேர்ந்து Air trafiic tower-ல் பண்ணும் கூத்து தாங்கமுடியாது அப்புறம் Con Air பார்த்திருப்பீர்கள் போலீஸாக Nicolas Cage உடன் நடித்திருப்பார்.)
       கடவுளோட கோபத்திலிருந்து தப்பிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக  Mayan காட்டில் தற்கொலை செய்து கொள்வதாக மத்திய அமெரிக்க ஊரான Guatemala-வில் இருந்து தகவல் வருகிறது .அமெரிக்காவின் ரகசிய பிரிவான IHC மக்களினத்தையும் விலங்குகளையும் காப்பற்ற இமயமலையில் ஒரு பாதுகாப்பான இடத்தை ஏற்படுத்துகிறது.அங்கு செல்வதற்கு கப்பலில் யார் யாரை ஏற்றுவது என்றும் யார் தகுதியானவர்கள் என்பதை தெர்தேடுப்பதிலும் பல பிரச்சனைகள் வருகின்றன. ஆனால் எதிர்பார்த்ததிற்கு முன்பே அசம்பாவிதங்கள் ஆரம்பிக்கின்றன,மக்கள் அனைவரும் கப்பல்களை நோக்கி ஓடுகின்றனர் . ஜான் தனது குழந்தைகளையும் மனைவியையும் தனது பழய காரில் ஏற்றி கொண்டு கப்பலை நோக்கி விரைகிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமே நிலநடுக்கத்தால் அழிந்து போகிறது.எப்பவுமே கிழக்கு கரை நகரைத்தான் அழிக்க வேண்டுமா ,மேற்கில் எதையாவது அழிங்கப்பா என்று வருந்துபவர்களுக்காக LA வை காலி பண்ணியிருக்காங்க.CG team நல்லாவே வேலை பார்த்திருக்கிறார்கள்.       ஸ்பீல்பெர்க் படம் முதல் நாளே பார்க்க வேண்டுமென்று போயி ஏன்டா இந்த படத்துக்கு வந்தோம் என்று வருத்தப்பட்ட "War of the Worlds" படத்தோட பாதிப்பு இந்த படத்துல ரொம்பவே இருக்கு."I Am Legend"-ல எல்லோரும் air craft பிடிக்க ஓடுவாங்க இங்கே கப்பல்.CG புண்ணியத்தால் உலகத்தையே உடச்சு போட்டிருக்கிறார்கள்.
     24 சீரியலுக்கு அப்புறம் இந்தப்படத்தில்தான் ஆப்பிரிக்க அமெரிக்கரை US President -ஆக காமிக்கிறார்கள்(Danny Glover).Woody Harrelson நம்மள போல பிளாக்கராக வருகிறார் ,  காமெடி பண்ணுவார்னு பார்த்த தாடி மீசையெல்லாம் வச்சுக்கிட்டு ஹீரோவுக்கு ஹெல்ப் பண்றவரா வருகிறார்."American Gangster"-ல டென்சில் வாசிங்க்டனுக்கு கைபுள்ளையாக வந்தா Chiwetel Ejiofor-க்கு கொஞ்சம் பெரிய ரோலா கொடுத்திருக்காங்க ,நல்லாவே பண்ணியிருக்கிறார்.John Cusack ,1408-ல் பேயை பார்த்து பயந்த மாதிரி இதில் தண்ணி ,காற்று,கடல் எல்லாத்தையும் பார்த்து பயந்து ஓடிகிட்டே இருக்கார்.Christ Redeemer,வாடிகன் அப்புறம் உலகத்தில பெரிய எல்லா கட்டடங்களையும் சும்மா தரை மட்டமா ஆக்கி போடுகிறார்கள். USS JFK CV67 நேவி கப்பலை அப்படியே கடலுக்குள்ள முக்கி எடுக்கிற காட்சி Titanic-கிற்கே சவால். ஒடஞ்சு போயிகிட்டிருக்கிற Oakland Bay Bridge மேலே ஹீரோ தப்பிக்கிற கட்சியும் மிக அருமை. யார் யாரு 2012 December 21-ஆம் தேதிக்கு அப்புறம் உயிரோட இருக்கப்போறாங்க என்பதை நவம்பர் 13-ஆம் தேதி திரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
    American Idol 2009-ல் நான் இந்த பையனுக்கு  வோட்டு போடாதிங்கனு மக்களுக்கு Text அனுப்பியதால் Runner-Up ஆனா Adam Lambert ஆல்பம் ஒன்னு  இந்த படத்தை  வச்சு வந்திருக்கு.கேட்டுப்பாருங்க.

California Is Going Down ..And The World

4 Responses to "2012 -உலகம் அழிகிறது-ஒரு முன்விமர்சனம்"

 1. gravatar வண்டிக்காரன் Says:

  படம் பார்த்த பிறகு இங்க வந்து எட்டிப்பார்த்தாலும் சந்தோசமே .. ஒட்டு போட்டவங்களுக்கு நன்றி

 2. gravatar ஹாலிவுட் பாலா Says:

  அண்ணே..., படம் பார்த்த பின்னாடி கூட..., இம்புட்டு எழுத முடியுமான்னு எனக்கு சந்தேகம்தான்.

  ஸ்டில்லை பார்த்தே.. நல்லா நடிச்சிருக்கார்ன்னு எல்லாம் எழுதறதுக்குதான்.. 18+ எழுதறதை விட தைரியம் வேணும்! :) :)

 3. gravatar பின்னோக்கி Says:

  எப்ப இந்தியால ரிலீஸ் 13ஆம் தேதியா இல்லை லேட் ஆகுமா ?

 4. gravatar Annamalai Says:

  நீங்க director பார்க்கிறதுக்கு முன்னாடியே படத்தை பார்த்திட்டீங்களா .நன்றாக உள்ளது.