ஊர்ல படம் ரிலீஸ் ஆகாததாலே ஒரு மொழி பெயர்ப்பு படத்துக்கு நம்ம பதிவுலகமும் பத்திரிகை உலகமும் இப்படித்தான் விமர்சனம் எழுதும் என்ற நம்பிக்கையுடன் எழுதப்பட்டது .
ஹிந்தியில் சக்கைப்போடு போட்ட ஜப் வி மெட் படத்தோட தமிழ் பதிப்பு .அப்படியே காப்பி அடிக்காம தமிழ் நேட்டிவிட்டிக்கு  ஏத்த மாதிரி மாத்தி  எடுத்திருக்காங்க (ஆமா ஹிந்தி டயலாக்கையெல்லாம் தமிழுக்கு மாத்தி   இருக்காங்க )

ஆனா ஷாகித் கபூருக்கும் கரீனா கபூருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி இந்த படத்தில்பரத்துக்கும் தமனாவுக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும் .அந்த கோடீஸ்வரன் பாத்திரத்துக்கு பரத் சுத்தமாக  பொருந்த வில்லை  .அதே போல் கரீனாவோட வெகுளித்தனமும் துடுக்குத்தனமும் தமனாவிடம் மிஸ்ஸிங் .
கதை என்னமோ ஒரு ரயில் பயணத்துல சந்திக்கிற இரு வேறுபட்ட நபர்களுக்கிடையே உள்ள உறவைப் பற்றியதுதான் .படத்தின் பின்பாதி பெண்ணுடன் வந்தவனை அவளின் காதலனாக என்னும் 'பூவேலி ' டைப் கதைதான் .
ஜெயம் கொண்டான் எனு ஒரு தரமான படத்தை கொடுத்த இயக்குனர் கண்ணன் ஏன் ரீமேக் படம் எடுக்க முன் வந்தார்னு தெரியல ,ஆனாலும் தன் பங்கை மிக சிறப்பாகவே செய்திருக்கிறார்.நமது முதல் பாராட்டு கேமரா மேன் முத்தையவுக்குத்தன் ,இரவு நேர ரயில் காட்சிகளையும் தேனியையும் படம் பிடித்த விதம் மிகவும் அருமை. வித்யா சாகரின் இசை 'ஒரு நாள் இரவில்' பாடலில் மட்டும் தெரிகிறது .
சந்தானம் அவ்வப்போது சிரிக்க வைக்கிறார் .நிழல்கள் ரவி ,அழகம் பெருமாள் ,தீபா வெங்கட் மற்றும் மனோ பாலா வந்து போகிறார்கள் .
Sun  Picture- சின்  வியாபார யுக்தி கண்டேன் காதலை காண வைத்துவிடுமேனே தோன்றுகிறது.அன்று மதியம் 3 மணியளவில் DownTown ஸ்டேஷனில் ட்ரைன் பிடிக்கும்போது இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று எதிர்பார்க்கவே இல்லை. நான் ஏறுன கம்பார்ட்மென்டில் என்னையும் சேர்த்து பத்து பேர் தான் இருந்தோம், அதில ஆறு பேர் காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் மாதிரி தெரிந்தது, MIT, Harvard,UMass எல்லாம் இந்த ரூட்ல இருப்பதால நிறைய காலேஜ் பசங்கள பார்க்கமுடியும், ரொம்ப சீரியசா அரட்ட அடிச்சிகிட்டு இருந்தாங்க. வாசலோரமா எனக்கு அருகில் ஒரு வயதான ஜோடி அவங்களுக்கு எதிர் வரிசையில் அவன். வண்டி ஸ்டேஷனில் இருந்து கிளம்பின பிறகுதான் நான் அவனை பார்த்தேன். இதற்கு முன்னால் எங்கோ பார்த்த முகமாக இருந்தது. எனக்கு 'திக்'கென்றது. சந்தேகமே இல்லை. அவன் என்னால் ஜெயிலுக்கு அனுப்பப் பட்டவனே தான்.

அது நடந்து ரெண்டு வருடமிருக்கும், ஒரு நாள் எனது வண்டியை ரோட்டோரமாக பார்க் செய்துவிட்டு மட்டன் வாங்குவதற்காக ஒதுக்குப்புறமாக இருந்த மிடில் ஈஸ்ட்காரன் கடைக்கு சென்றிருந்தேன். திரும்பி வரும்போது ஏதோ கார் கண்ணாடி உடையும் சத்தம் கேட்டது. ஒருவேளை என்னுடைய கார் தானோ என்ற தவிப்பில் காரை நோக்கி ஓடினேன். ஆம். உடைந்தது என்னுடைய கார் கண்ணாடி தான். அப்போது தான் முதன் முதலாய் அவனைப் பார்த்தேன். நான் வருவது தெரிந்ததும், அங்கிருந்து ஓடிவிட்டான். என் நல்ல காலம். அவன் என் காரிலிருந்து எதுவும் எடுத்ததாகத் தெரியவில்லை. முறைப்படி போலீசுக்கும், என்னோட இன்சூரன்ஸ் கம்பெனிக்கும் போன் பண்ணிட்டு என் வேலைய பார்க்க ஆரம்பிச்சிட்டேன். அடுத்த நாள் போலீஸ் ஆளை பிடிச்சிட்டதாகவும் வந்து அடையாளம் காட்ட முடியுமான்னும் வாய்ஸ் மெயில் விட்டிருந்தார்கள். சரின்னு நானும் போயிருந்தேன். அங்கதான் அவனை முழுசாக பார்த்தேன், வெள்ளக்காரந்தான், ஹோம்லேஸ் மாதிரி தெரிந்தது, சவுத் accent-ல பேசினான், அவனும் என்னை நன்றாக பார்த்தான், அடுத்த முறை பார்த்தால் உன்னை கொன்று விடுவேன் என்று சொல்வது போலிருந்தது அவன் பார்வை. அதுக்கப்புறம் அவனுக்கு ஆறு மாதம் ஜெயில் தண்டனை கிடச்சதாக என்னை அழைத்த போலீஸ் சொல்லி தெரிந்துகொண்டேன்.

அவனை இப்படி எதிரும் புதிருமா, கூட்டமில்லாத ட்ரைனில் வைச்சு சந்திப்பேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. அதற்குள் அந்த முதியவர்கள் Broadway-ல் இறங்கி விட, அந்த காலேஜ் கும்பலும் UMass-ல் இறங்கி விட, புதிதாக ஒருவன் வண்டியில் ஏறினான். பார்ப்பதற்கு ராணுவத்தில் வேலை பார்ப்பவன் போலிருந்தான். கொஞ்சம் தைரியம் வந்தது, எனது iphone-ல் Sudoku போட ஆரம்பித்தேன். வண்டி அடுத்த ஸ்டேஷனை கடந்துவிட்டதையும் அந்த மிலிடிரிகாரன் இறங்கி இருந்ததையும் சுத்தமாக அறியாமல் இருந்தேன்.
யாரோ என்னைக் கூர்ந்து கவனிப்பது போல இருக்கவே நிமிர்ந்து பார்த்தேன், அவன்தான், என்னையே முறைத்துக் கொண்டிருந்தான். இப்பொழுது நானும் அவனும் மட்டுமே அந்த கம்பார்ட்மென்டில் இருந்தோம். அடுத்த ஸ்டேஷன் வர எப்படியும் ஐந்து நிமிடங்களாவது ஆகும். எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவன் எதாவது செய்ய முயற்சி செய்தாலோ, இல்லை இல்லை, அவன் கிட்ட இருந்து ஒரு அசைவு தெரிந்தாலே, உடனடியா Emergency Lever -ஐ இழுத்து விடலாம். என்னவானாலும் சரி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிவிடலாம் என முடிவு செய்து கொஞ்சம் தைரியமாகவே உட்கார்ந்து இருந்தேன்.
ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமா கடக்கிறது காதலில் மட்டுமில்லை பயத்திலும்தான் என்கிற உண்மை எனக்கு அப்பத்தான் புரிஞ்சது. அடுத்த ஸ்டேஷன் வந்துவிட்டதாக அறிவிப்பு வரவும் நான் அவசரமாக எழுந்திருக்கவும் அவனும் எழுந்திருந்தான். நான் வாசலை நோக்கி ஓட அவன் பாக்கெட்டிலிருந்து துப்பாக்கியை எடுத்திருந்தான். ட்ரைன் நின்ற அதிர்வில் நான் நிலை தடுமாறி கிழே விழ அவன் நெருங்கி வந்து துப்பாக்கியை என் நெற்றியில் வைத்து விசையை அழுத்த....

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ........ கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ..... கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் .....

காலிங் பெல் சத்தம் தொடர்ந்து அழைக்க "என்னடா ஒரு கதை நச்சுன்னு எழுதி நல்ல பேர் வாங்கலாமுன்னா தனியா ஒரு அரை மணி நேரம் கிடைக்க மாட்டேங்குதே" புலம்பிக்கொண்டே Ctrl-யும் s-யும் ஒரே  நேரத்தில அழுத்திட்டு   வாசலை நோக்கி சென்றான் கதாசிரியன் கண்ணன்.

சர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி

பொதுவா நம்ம பசங்க சொல்றது US-ல இருந்து வந்தா இவனுக பண்ற அலப்பர தாங்க முடியலடா, எதுக்கெடுத்தாலும் அமெரிக்காவுல அப்படி இருக்கும், இப்படி இருக்கும், இப்ப்படித்தான் பாரு ஒரு தடவ express way-ல போய்கிட்டிருக்கும்போது அப்படின்னு ஆரம்பிக்கிறாங்கப்பா. இதுக்கெல்லாம் என்ன காரணமுன்னு யோசிச்சு பாத்தப்ப நாமளும் கொஞ்சம் எழுதலாமுன்னு தோனுச்சு அதான் இந்த பதிவு.


நான் ஆண்டிப்பட்டில அஞ்சாப்பு படிக்கும்போது சுந்தரு மதுரைல ஒரு A/C தியேட்டருல அப்பாவோட படம் பாத்துட்டு வந்து பண்ண அலப்பர இருக்கே .அவன் சொல்றான் " டே மதுரைல எத்தன பஸ் ஓடுது தெரியுமா? (எண்ணி பத்துருப்பான் முடிஞ்சிருக்காது அவனுக்குத்தான் ஒண்ணாம் வாய்ப்பாடே சரியாய் தெரியாது ) நாங்க போயிருந்தப்ப பெரியாருக்கு திருவிழா அதன் பஸ் ஸ்டாண்டுல ரொம்ப கூட்டம் நடக்கவே எடமில்ல (மாரியாத்தா கோவில்ல கூட்டமுன்னா மாரியாத்தா திருவிழா பெரியார் பஸ் ஸ்டாண்டுல கூட்டமுன்னா பெரியார் திருவிழா, நம்ம ஆளு ரொம்ப புத்திசாலி). அவன் படத்த பத்தியும் மதுரைய பத்தியும், ஏன், வாங்கி திண்ண சுண்டல பத்தியுங்கூட அந்த அலப்பர வுட்டது இன்னும் ஞாபகம் இருக்கு. படம் முடியிறதுக்கு 10 நிமிசத்துக்கு முன்னால A/C-ய நிறுத்தலனா தியேட்டர் வெடுச்சுடுங்கின்கிற உண்மையையும் அவன்தான் எனக்கு சொன்னான்.

அப்பறம் காலேஜ்ல மெட்ராஸ் காரைங்க பண்ண அலப்பரையும் மெட்ராஸ், மெட்ராஸ் அல்லாதோர் அப்படின்னு கோஸ்டி பிரிஞ்சதுக்கும் அதே அலப்பரதான் காரணம். நம்ம சுந்தர் மேட்டருக்கு வர்றேன், மாப்புள மெட்ராஸ் இருந்தாப்புல அப்ப. நான் சென்ட்ரல் ஸ்டேஷனில் இறங்கி அவனுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன், திமு திமுன்னு ஒரு கூட்டம் ஸ்டேஷன் நோக்கி ஓடி வருது, இங்கிட்டு பாத்தா ரோட்டப்பாத்து ஒரு கும்பல் ஓடுது, ஒன்னும் புரியாம பெட்டிய காலுக்கு நடுவுல வச்சிக்கிட்டு நிக்கிறேன். அந்த பய சுந்தரு வந்த பின்னாடி என்னடா விஷயம் இவ்வளோ பரபரப்பா இருக்குன்னு கேட்டா, ஆபீஸ் டைம் அதான் பஸ்ஸோ டிரைனோ பிடிக்க ஓடுவாங்க இது கூட தெரியாதான்னு வுட்டாம்பருங்க ஒரு லுக்கு என்ன அலப்பர புடுச்ச பய.

அவன் பெங்களூர் போயுட்டு மெட்ராஸ் வந்து பண்ண அலப்பர இருக்கே, யப்பா .. MG ரோடு, Brigade ரோடெல்லாம் பிகருங்களா அலுயுதாம் KFC-ன்னு ஒரு கடைல (அப்போ) எதோ ஒரு கர் சாப்புட்டராம், இடி மழை பெஞ்சிக்கிட்டு இருக்கும்போதோ ஒரு குட்டி Ice cream சாப்புட்டுகிட்டே ரோட்டுல நடந்து போச்சாம் ... என்ன அலப்பர.நாம எப்பிடியோ மாட்டுவண்டிய புடுச்சு அமெரிக்க வந்து பொழப்பு ஓடிக்கிட்டு இருக்கு ... கொஞ்ச நாளைக்கு முன்னால ஊருக்கு வந்தப்ப Star Bucks-ல Cappuccino குடுச்சிட்டு இருக்கும்போது அப்படின்னு ஆரம்பிக்கிறதுக்கு முன்னலேய நம்ம சுந்தரு சொல்றான் ...

ஏன்டா இப்படி அலப்பர பண்ற


பி.கு : ஆண்டிப்பட்டிக்கு மதுரை, மதுரைக்கு சென்னை, சென்னைக்கு பெங்களூரு, இந்தியாவுக்கு வேற நாடு அப்படின்னு அலப்பரைகளுக்கும் அர்த்தமிருக்கத்தான் செய்யுது.

Hygienic food, Minaral water, வூடு கட்ட மறந்தாலும் வூட்ல Western Toilet கட்டற அலப்பரைகளப் பத்தி அடுத்து அடுத்து எழுதப் போறேன் ...